ஒடிசா மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிவாரண நிதி - பிரதமர் மோடி அறிவிப்பு
புதுடெல்லி, 16 மார்ச் (ஹி.ச) ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் செயல்பட்டு வரும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று அதிகாலை முதல் தளத்தில் திடீரென தீப்பற்றியது. இந்த பயங்கரத் தீ விபத்தில் பத்து நோயாளிகள் உயிரிழந்தனர். அதேவேளைய
ஒடிசா மருத்துவமனை தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் நிவாரண நிதி - பிரதமர் மோடி அறிவிப்பு


புதுடெல்லி, 16 மார்ச் (ஹி.ச)

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் செயல்பட்டு வரும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று அதிகாலை முதல் தளத்தில் திடீரென தீப்பற்றியது.

இந்த பயங்கரத் தீ விபத்தில் பத்து நோயாளிகள் உயிரிழந்தனர். அதேவேளையில், மீட்புப் பணிகளின் போது 11 மருத்துவமனை ஊழியர்கள் காயமடைந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் பிரதமர் கூறியதாவது:

ஒடிசாவின்கட்டாக்கில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்.

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) உயிரிழந்த ஒவ்வொருவரின் வாரிசுக்கும் தலா ₹2 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும்

என்று அறிவித்துள்ளார்.

ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மஜி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், இச்சம்பவம் குறித்து நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டார்.

முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து (CMRF) உயிரிழந்த ஒவ்வொருவரின் வாரிசுக்கும் தலா ₹25 லட்சம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று ஒடிசா முதலமைச்சர் மோகன் அறிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b