ராமதாஸ் தரப்பு பாமக கூட்டணி குறித்து இன்று அறிவிப்பு
சென்னை, 16 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதனை தொடர்ந்து 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை நேற்று மாலை தலைமைத் த
ராமதாஸ் தரப்பு பாமக கூட்டணி குறித்து இன்று அறிவிப்பு


சென்னை, 16 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.

அதனை தொடர்ந்து 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை நேற்று மாலை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி (23.04.2026) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால், யாருடன் கூட்டணி என்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு இன்னும் தெரிவிக்கவில்லை, பாமக எந்த அணியுடன் இணையப் போகிறது என்பது குறித்து கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்கள் நிலவி வருகின்றன.

இந்த நிலையில், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் பாமக, எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்பது குறித்து ராமதாஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்.

குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளுடன் பாமக இணைவதற்கான வாய்ப்புகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பாமக அமைக்கும் கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக இருக்கும் என்றும், மக்கள் ஆதரவைப் பெற்று வெற்றி பெறும் வகையில் கூட்டணி அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b