பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற புகார் பெட்டி - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு
கோவை, 16 மார்ச் (ஹி.ச.) தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால்தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்
பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற பெட்டி - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்பாடு


கோவை, 16 மார்ச் (ஹி.ச.)

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால்தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்த போஸ்டர்கள், பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, பொதுமக்கள் அவர்களது கோரிக்கை மனுக்களை தபால் மூலமாகமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயில் வரவேற்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள மக்கள் குறைதீர்வு மனுக்கள் பெறும் பெட்டியில் மனுக்களை செலுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் பெறப்படும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள், அவர்களது மனுக்களை அந்தப் பெட்டியில் இட்டுச் செல்லலாம். அதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு புகார் பெட்டி நிறைந்தவுடன், அவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இந்தப் பெட்டியில் பெறப்படும் மனுக்களை அதிகாரிகள் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b