Enter your Email Address to subscribe to our newsletters

திருவனந்தபுரம், 16 மார்ச் (ஹி.ச.)
கேரளாவில் மொத்தம் 140 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
இந்தத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
தொடர்ந்து 2 முறை கேரளாவில் ஆட்சியில் இருந்த ஒரே கூட்டணி இடதுசாரி கூட்டணி தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த இருமுறையும் பினராயி விஜயன் தான் முதல்வராக இருந்தார்.
இம்முறையும் பினராயி விஜயன் தான் முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார்.
இந்நிலையில் நேற்று தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே இடதுசாரி கூட்டணியில் முக்கிய கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் மீண்டும் களம் காண்கிறார்.
இவருடன் இந்திய கால்பந்து வரலாற்றில் முத்திரை பதித்த யு. ஷரப் அலி (சுயேச்சை) போன்ற விளையாட்டு வீரர்களும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
சிபிஎம்மில் முதற்கட்டமாக 81 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இடது ஜனநாயக முன்னணி (LDF) ஆதரவு பெற்ற 6 சுயேச்சை வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர்.
Hindusthan Samachar / Durai.J