Enter your Email Address to subscribe to our newsletters

கன்னியாகுமரி, 16 மார்ச் (ஹி.ச.)
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கேரளா மாநிலம் கொல்லம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து குமாரகோவில் என்ற பகுதியில் வைத்து கட்டுப்பாட்டை இழந்து வலது புறமாக சென்று எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
அதி வேகமாக வந்து இருசக்கர வாகனம் மீது மோதிய பேருந்து சாலையோரம் இருந்த ரெஸ்ட்டாரண்ட் கார் பார்க்கிங்கில் புகுந்து சுற்று சுவரை இடித்து தள்ளி வள்ளியாற்றில் புகுந்து தலை கீழாக தொங்கியது.
தலை கீழாக தொங்கிய பேருந்தில் பெங்களூரில் இருந்து வந்த 30 க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கி கொண்ட நிலையில் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தில் பயணித்த சந்தோஷ், விஜய் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தக்கலை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மற்றும் மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் ஆகியோர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி பதிவுகளும் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam