பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனின் தந்தை உயிரிழப்பு -தாயின் கண்ணீரை துடைத்துவிட்டு தேர்வுக்கு சென்ற மாணவன்
சிவகங்கை, 16 மார்ச் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45) இவருக்கு இரண்டு மகள்கள்,ஒரு மகன் உள்ளார். மகன் இளமாறன் (வயது 15) சிங்கம்புணரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயன்று வருகிற
தேர்வு


சிவகங்கை, 16 மார்ச் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன்

(வயது 45) இவருக்கு இரண்டு மகள்கள்,ஒரு மகன் உள்ளார்.

மகன் இளமாறன் (வயது 15)

சிங்கம்புணரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயன்று வருகிறார்.

சரவணன் தனியார் உணவு விடுதியில் புரோட்டோ மாஸ்டராக வேலை செய்து

வருகிறார்.

கடந்து சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த சரவணன் மதுரை

அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இன்று பத்தாம் வகுப்பு ஆங்கிலம் தேர்வு நடைபெறுவதால் மாணவன் இளமாறன் அப்பாவை பார்க்க

மருத்துவமனை செல்லாமல் பரீட்சைக்காக தயாராகிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அரசு மருத்துவமனையில் சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் சிங்கம்புணரி மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு பத்தாம் வகுப்பு படிக்கும்

மாணவன் இளமாறன் அப்பாவிற்கு இறுதி சடங்குகள் செய்தார்.

இந்நிகழ்வு அனைவரையும்

கண்கலங்க வைத்தது.

இது குறித்து தகவல் அறிந்த சிங்கம்புணரி பேரூராட்சி துணை சேர்மன் செந்தில்குமார் மயானத்திற்கு தனது காரில் விரைந்து வந்தார்.

ஆங்கில தேர்விற்கு

காலதாமதம் ஆகும் என கருதி பள்ளி மாணவன் இளமாறன் அப்பாவிற்கு இறுதி சடங்கு

செய்த உடன் பள்ளித் தேர்வு எழுத துணை சேர்மன் காரில் கூட்டி வந்து பள்ளி வளாகத்தில் குறித்த நேரத்தில் தேர்வு எழுத கொண்டு வந்து இறக்கி விட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Hindusthan Samachar / GOKILA arumugam