தேர்தல் நடத்தை விதிமுறைகளால், மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஒத்திவைப்பு
தர்மபுரி, 16 மார்ச் (ஹி.ச.) இந்திய தேர்தல் ஆணையம், தமிழக சட்டசபை பொதுத்தேர்தல், 2026ஐ முன்னிட்டு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே, தேர்தல் நடத
தேர்தல் நடத்தை விதிமுறைகளால், மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஒத்திவைப்பு


தர்மபுரி, 16 மார்ச் (ஹி.ச.)

இந்திய தேர்தல் ஆணையம், தமிழக சட்டசபை பொதுத்தேர்தல், 2026ஐ முன்னிட்டு தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வார திங்கட்கிழமை தினங்களில் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ் அறிவித்துள்ளார்.

மீண்டும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் திரும்ப பெறப்பட்ட பிறகு, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும்.

இது குறித்த இறுதி அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும். மக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளிக்க விரும்பினால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் கோரிக்கை மனுக்களுக்கான பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

அதில், மனுக்களை போடலாம். என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b