Enter your Email Address to subscribe to our newsletters

புதுச்சேரி, 16 மார்ச் (ஹி.ச.)
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக நேற்று டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான தவெக தலைவர் விஜய், விசாரணை முடிந்து இன்று காலை சென்னை திரும்பினார்.
இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.
இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை விஜய் இன்று இறுதி செய்கிறார்.
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கு வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி வரும் 23 ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தலில் போட்டியிடும் தன் கட்சி வேட்பாளர்களை விஜய் இன்று இறுதி செய்கிறார்.
இதற்கான வேட்பாளர் நேர்காணல் இன்று பனையூர் அலுவலகத்தில்
நடைபெறுகிறது.
Hindusthan Samachar / ANANDHAN