Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மார்ச் (ஹி.ச.)
சென்னை: ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்கு 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மொழிகளில் சிறந்த படைப்புக்காக வழங்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதுகள் சிறந்த கவிதை, நாவல், சிறுகதை, இலக்கிய ஆய்வுபோன்ற பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ என்ற நூலுக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அரசியல் பிரபலங்களும் வாசகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ச.தமிழ்ச்செல்வனுக்கு ஏற்கெனவே சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட இருந்தது.
ஆனால் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b