Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 16 மார்ச் (ஹி.ச.)
சேலம் மாநகர் கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோரிமேடு பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி தேநீர் குடிப்பதற்காக வந்த போது அதே பகுதியில் குடிபோதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி பலவந்தமாக கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளனர்.
மேலும் மூதாட்டி கத்தி கூச்சல் போட்டதால் தப்பிச் சென்ற இளைஞர்கள்.
இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மூதாட்டி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கன்னங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலத்தில் நள்ளிரவில் மூதாட்டியை போதை இளைஞர்கள் கற்பழிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு வேறொரு மூதாட்டியை வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ரவிக்குமார் என்பவர்தான் இந்த மூதாட்டியிடம் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்நிலையில் ரவிக்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தப்பி ஓடிய மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam