Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 16 மார்ச் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவில் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் வீடுகளில் ஒன்றாகவும், பழனிக்கு அடுத்த படியாக பக்தர்கள் அதிக அளவில் குவியும் முருகன் கோவிலாகவும் இருந்து வருகிறது.
இங்கு திருவிழா மற்றும் விசேஷ நாட்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடியில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வெப்பத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க, கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராஜகோபுர திருப்பணி மண்டபத்தில் ஏர் கூலர்கள் மற்றும் மின்விசிறி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சாமி தர்சனம் செய்யும் மூத்த குடிமக்களுக்காகத் தனி வரிசை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் கோயிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அன்று இரவு முருகப்பெருமான் - வள்ளியம்மன் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற உள்ளதாகக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b