Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 மார்ச் (ஹி.ச.)
வடசென்னை ஆர்கேநகர் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் எடுத்து ஆறு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கட்டப்பட்டு கடந்த மாதம் முதல்வரால் காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.
அதன் பின்னர் இங்கு வசிக்கக்கூடிய மக்களுக்கு வீடுகள் ஒதுக்கி தர அதிகாரிகள் முகாம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் அதிகாரிகள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப குடியிருப்பு வாசிகளுக்கு வீடுகளை ஒதுக்கி தருவதாகவும் தரைதளத்தில் வசித்து வந்தவர்களுக்கு நான்காம் மாடியில் வீடுகளை வழங்கி இருப்பதாகவும் இவற்றையெல்லாம் மாற்றி தர வேண்டும் என்று பகுதியை சேர்ந்த மக்கள் அதிகாரியிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.
இருந்த போதும் அதிகாரி கண்டுகொள்ளாத நிலையில் ஆத்திரமடைந்த குடியிருப்பு வாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகள் மக்களுக்கு ஏற்ப அளவில் உதவி செய்யவில்லை என்றும் முறையாக வீடுகளை உடுத்தாமல் மக்களின் கருத்தை கேட்காமல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
உடனடியாக அதிகாரிகள் ஒடுக்கப்பட்ட வீடுகளை முறைப்படுத்தி தரவேண்டும் என கூறி இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர்.
அரை மணி நேரமாக நடைபெற்று வரும் இந்த சாலை மறியலால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் அனுமதி ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மக்களிடம் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam