உதகை அரசு மருவத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது
நீலகிரி, 16 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளாக பாலியல் ரீதியான சட்டம் ஒழுங்கு பாதிப்படைந்து மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் மருத்துவராக பணிபுரிந்து வரு
கைது


நீலகிரி, 16 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளாக பாலியல் ரீதியான சட்டம் ஒழுங்கு பாதிப்படைந்து மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், உதகை

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் ஓம்பிரகாஷ் (45).

இவர் உதகை அரசு மருத்துவ கல்லூரியில் 4-ம் ஆண்டு பயின்று

வரும் மாணவி ஒருவர் தனக்கு படிப்பில் ஆர்வம் செலுத்த முடியாமல் மன அழுத்தம் ஏற்படுவதாக மருத்துவர் ஓம் பிரகாஷிடம் கூறியுள்ளார்.

இதை பயன்படுத்தி மருத்துவர், மாணவியின் செல் நம்பரை வாங்கி வாட்ஸ் ஆப்பில் ஆசை வார்த்தைகள் கூறி நம்ப செய்துள்னார்.

பின்னர் மாணவிக்கு தான் உனக்கு கவுன்சிலங் செய்ய உள்ளதாகவும், அதற்கு மேலும் மூன்று மருத்துவர்கள் உதகையில் உள்ள தனியார்

ஹோட்டலில் தங்கியுள்தாகவும் கூறி, மாணலியை அழைத்து ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.

அங்கு தனி அறை எடுத்து மாணவியையும் அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை

கொடுத்துள்ளார்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத மாணவி அறையிலிருந்து வெளியேறி

பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்த பெற்றோர்கள் உதகை மத்திய

காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், மருத்துவர் ஓம்பிரகாஷ் கைது

செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து விசாரணை முடிந்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது

செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் உதகை அரசு மருத்துவ மனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Hindusthan Samachar / GOKILA arumugam