தேர்தல் விதிகளை மீறி வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் - நா.த.கட்சியினர் மீது வழக்குப்பதிவு
தென்காசி, 16 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பானது நேற்றைய தினம் இந்திய தலைமை தேர்தல் ஆணையரால் வெளியிடப்பட்ட நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளானது 5 மாநிலங்களிலும் அம
Uthumalai Police Station


தென்காசி, 16 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பானது நேற்றைய தினம் இந்திய தலைமை தேர்தல் ஆணையரால் வெளியிடப்பட்ட நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளானது 5 மாநிலங்களிலும் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நாம் தமிழர் கட்சி சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டமானது அனுமதியின்றி நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரியான வேளாண்மை துறை உதவி இயக்குனராக பணியாற்றி வரும் உதயகுமார் என்பவர் ஊத்துமலை காவல் நிலையத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக உள்ள சரவணன் என்பவர் மீது 2 பிரிவுகளின் கீழ் தற்போது ஊத்துமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் நடத்தை விதிமுறைகளை மீறி கட்சி நிகழ்ச்சி நடத்திய நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் மீது தமிழகத்தில் முதல்முறையாக நடத்தை விதிமுறைகளை மீறியதாக இந்த சட்டமன்ற தேர்தலில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN