Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 16 மார்ச் (ஹி.ச.)
மத்திய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் இன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
மத்திய அமைச்சர் ஸ்ரீ சி.ஆர். பாட்டீல் ஜி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீர் மேலாண்மையை வலுப்படுத்துவதற்கும், ஹர் கர் ஜல் என்ற தொலைநோக்குப் பார்வையை முன்னேற்றுவதற்கும் அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்பு முயற்சிகள் எண்ணற்ற குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவுகின்றன.
தேச சேவையில் அவர் நீண்ட, ஆரோக்கியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b