Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 17 மார்ச் (ஹி.ச.)
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பறக்கும் படைகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்களின் செயல்பாடுகளையும் மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் இன்று (மார்ச் 17 ) நேரில் ஆய்வு செய்தார்.
தேர்தல் தொடர்பான புகார்களைப் பெறவும், தேர்தல் நடத்தை விதிமீறல்களைக் கண்காணிக்கவும் இந்த அறை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கி வருகிறது.
பொதுமக்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் புகார்கள் எவ்வாறு பதிவு செய்யப்படுகின்றன என்பது குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
Hindusthan Samachar / vidya.b