Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 17 மார்ச் (ஹி.ச.)
பிலாஸ்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வாரம் ஒருமுறை இயக்கப்படும் விரைவு ரெயில், சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரள மாநிலம் வழியாக செல்கிறது.
இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது,
இந்த ரெயில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம்-ஆலப்புழா ரெயில் நிலையங்களுக்கு நடுவே இருக்கும் சேர்த்தலா ரெயில் நிலையத்தில், தற்காலிகமாக சோதனை முயற்சியாக நிறுத்தப்படும்.
பிலாஸ்பூர்-திருநெல்வேலி (வண்டி எண்.22619) வாராந்திர விரைவு ரெயில் இன்று பிலாஸ்பூரில் இருந்து தொடங்கி, நாளை இரவு 8.24 மணிக்கு சேர்த்தலா வந்து, 8.25 மணிக்கு அங்கிருந்து புறப்படும்.
திருநெல்வேலி-பிலாஸ்பூர் (22620) வாராந்திர விரைவு ரெயில் வருகிற 22-ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து கிளம்பி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.14 மணிக்கு சேர்த்தலா வந்து, 7.15 மணிக்கு புறப்படும்.
Hindusthan Samachar / JANAKI RAM