அறந்தாங்கியில் திருமணத்திற்கு வைத்திருந்த 137 பவுன் தங்க நகைகள் கொள்ளை!
புதுக்கோட்டை, 17 மார்ச் (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அப்துல்ஹமீது தெருவில் வசித்து வரும் ஹாஜா நஜுமுதீன் என்பவரின் வீட்டில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவரது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 137 பவுன் தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள
Aranthangi Police Station


புதுக்கோட்டை, 17 மார்ச் (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம்

அறந்தாங்கி அப்துல்ஹமீது தெருவில் வசித்து வரும் ஹாஜா நஜுமுதீன் என்பவரின் வீட்டில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவரது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 137 பவுன் தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனுடன் அருகில் உள்ள கிரீன் முகமது என்பவரின் வீட்டிலும் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்கு வைத்திருந்த ரூ.2 லட்சம் ரொக்கப் பணமும் மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு வீடுகளிலும் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மர்ம நபர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

Hindusthan Samachar / ANANDHAN