பெங்களூரு - ஜோலார்பேட்டை மெமு ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே தகவல்
சென்னை, 17 மார்ச் (ஹி.ச.) திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிக்னல் அறையில் நடைபெற உள்ள பொறியியல் பணிகள் காரணமாக, ரெயில் சேவைகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டைக்கு வரும் 18, 19 மற்றும
Bengaluru–Jolarpettai MEMU Train


சென்னை, 17 மார்ச் (ஹி.ச.)

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிக்னல் அறையில் நடைபெற உள்ள பொறியியல் பணிகள் காரணமாக, ரெயில் சேவைகளில் சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

அதன்படி பெங்களூருவில் இருந்து ஜோலார்பேட்டைக்கு வரும் 18, 19 மற்றும் 24-ந் தேதிகளில் காலை 8.45 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் சோமநாயக்கன்பட்டியுடன் நிறுத்தப்படும். சோமநாயக்கன்பட்டி - ஜோலார்பேட்டை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டைக்கு வரும் 18, 19 மற்றும் 24-ந் தேதிகளில் புறப்படும் பயணிகள் ரெயில் திருப்பத்தூருடன் நிறுத்தப்படும். திருப்பத்தூர் - ஜோலார்பேட்டை இடையே ரத்து செய்யப்படுகின்றன.

இதனால், மேற்கண்ட 2 ரெயில்களும் நிறுத்தப்படும் ஊர்களில் இருந்தே திரும்பிச் செல்லும்.

அதேபோல், பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து மதுரை நோக்கி புறப்படும் வந்தே பாரத் ரெயில் வரும் 18 மற்றும் 19-ந் தேதிகளில் 45 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

அதாவது, மதியம் 1.30 மணிக்கு பதில் பகல் 2.15 மணிக்கு கிளம்பும் என தெற்கு ரெயில்வே கூறியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b