தெலங்கானாவில் தனியார் பேருந்து கவிழ்ந்து ஒருவர் படுகாயம்
தெலங்கானா, 17 மார்ச் (ஹி.ச.) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மேட்சல்-மல்காஜ்கிரி வட்டாரத்தில் ஊழியர்களுடன் பயணம் செய்த ''லீ பார்மா'' நிறுவனத்தின் தனியார் மினி பேருந்து இன்று பச்சுப்பள்ளி செல்லும் பாதையில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் படுகாயம்
தெலங்கானாவில் தனியார் பேருந்து கவிழ்ந்து ஒருவர் காயம்


தெலங்கானா, 17 மார்ச் (ஹி.ச.)

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மேட்சல்-மல்காஜ்கிரி வட்டாரத்தில் ஊழியர்களுடன் பயணம் செய்த 'லீ பார்மா' நிறுவனத்தின் தனியார் மினி பேருந்து இன்று பச்சுப்பள்ளி செல்லும் பாதையில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த விபத்து 'டாடா மோட்டார்ஸ்' அருகே நிகழ்ந்தது.

இது தொடர்பாக காவல்துறை அதிகாரி கூறியதாவது,

பேருந்தில் சுமார் 10 பணியாளர்கள் பயணம் செய்தனர். இந்த விபத்தில் ஒருவர் தலையில் பலத்த காயமடைந்தார். இதர பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

தற்போது அந்த பகுதியில் வாகன போக்குவரத்து இயல்பாக நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Hindusthan Samachar / JANAKI RAM