ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலை வெளியிட டிஎன்பிஎஸ்சிக்கு தேர்வர்கள் கோரிக்கை
சென்னை, 17 மார்ச் (ஹி.ச) இளநிலை அறிவியல் அலுவலர், உதவி பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு), உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) உட்பட 51 வகையான பதவிகளில் 1,033 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் ஜனவரி 23-
Candidates request the TNPSC


சென்னை, 17 மார்ச் (ஹி.ச)

இளநிலை அறிவியல் அலுவலர், உதவி பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு), உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-2) உட்பட 51 வகையான பதவிகளில் 1,033 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் ஜனவரி 23-ம் தேதி வெளியிடப்பட்டன.

இதைத்தொடர்ந்து பிப்ரவரி

26-ம் தேதி இணையவழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியானது.

நேர்காணல் இல்லாத பதவிகளுக்காக நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான இத்தேர்வில் இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிட்டு 3 வாரங்கள் ஆகியும் இன்னும் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியிடப்படவில்லை.

இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களில் யாரேனும் உரிய சான்றிதழ்களை ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருந்திருந்தாலும், குறைபாடான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தாலும் அவர்களுக்கு இன்னும் கால அவகாசம் ஏதும் தரப்படவில்லை.

இதனால், மதிப்பெண் தரவரிசையில் முன்னிலையில் இருந்து பணி வாய்ப்பு பெறும் நிலையில் உள்ள தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலுக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் வெளியிட்டு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வை நடத்தி பணிக்கு தேர்வானோர் பட்டியலை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிட வேண்டும் என்று அத்தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b