Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 மார்ச் (ஹி.ச.)
சென்னை பல்லாவரம்
பாரதி நகர் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஷானா பாத்திமா (29).
இவர் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு முகமது அலி (31) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் கணவர்-மனைவி ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் மனைவி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு 7 மாதங்களுக்கு முன்பு ஷானா தன் கணவரை பிரிந்து தந்தை வீட்டில் வாழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஷானா பாத்திமாவின் பெற்றோர்,, உறவினரின் காதுகுத்து நிகழ்ச்சிக்கு மதுரை சென்று விட்ட நிலையில் ஷானா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அன்று இரவு ஷானா பாத்திமா வேலை முடிந்து வீட்டருகே உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து வந்த கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த முன்னாள் கணவர் முகமது அலி ஷானாவை வழிமறித்து வீண் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் ஷானா அவரிடம் பேசாமல் நடந்து சென்றதால் ஆத்திரமடைந்த முகமது அலி தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்(வீடு சுத்தம் செய்யும் ஆசிட்) எடுத்து ஷானா முகத்தில் வீசியதில் அவரது இடது கண் பாதிப்பு அடைந்தது.
உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து முகமது அலியை அடித்து விரட்டி விட்டு ஷானாவை மீட்டு அருகில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ந்தனர். ஆசிட் பட்டு ஷானா இடது கண் பார்வையை இழந்ததாக தெரிகிறது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து ஷானா பாத்திமா அளித்த புகாரின் பேரில் பல்லாவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam