சென்னையில் 900 மாடுகளுக்கு மட்டுமே மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது - மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்தது நாளையோடு நிறைவு
சென்னை, 17 மார்ச் (ஹி.ச) சென்னையில் 22,857 மாடுகள் உள்ள நிலையில் இதுவரை 900 மாடுகளுக்கு மட்டுமே மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 45 நாட்களாக சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் ம
Cow


சென்னை, 17 மார்ச் (ஹி.ச)

சென்னையில் 22,857 மாடுகள் உள்ள நிலையில் இதுவரை 900 மாடுகளுக்கு மட்டுமே மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 45 நாட்களாக சென்னையில் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் மாடுகளின் உரிமையாளர்கள் மைக்ரோ சிப் பொருத்த ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

சென்னையில் நாளை மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்த கடைசி நாள் என்பதால் மைக்ரோ சிப் பொருத்தப்படாத மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் மாடு தொழுவங்களில் உள்ள மாடுகளுக்கு மட்டுமே தற்போது சிப் பொருத்தப்பட்டுள்ளது.

மாடுகள் சாலைகளில் நடமாடுவதால் போக்குவரத்து இடையூறு, பொதுமக்களை தாக்குதல் போன்ற காரணங்களால் மாடுகளுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்தது.

Hindusthan Samachar / P YUVARAJ