சென்னையில் லாரி மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
சென்னை, 17 மார்ச் (ஹி.ச.) சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் அபினேஷ் லிங்கேஸ்வரன். இவரது நண்பர்கள் தனுஷ், யாமின் உல்லா. நேற்று நள்ளிரவில் யாமின் உல்லாவை பார்க்க கொடுங்கையூர் உள்ள அல் அமீன் மசூதியின் தொழுகைக்கு அபினேஷ், தனுஷ் இருவரும் தனுஷின்
Lorry


சென்னை, 17 மார்ச் (ஹி.ச.)

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் அபினேஷ் லிங்கேஸ்வரன். இவரது நண்பர்கள் தனுஷ், யாமின் உல்லா. நேற்று நள்ளிரவில் யாமின் உல்லாவை பார்க்க கொடுங்கையூர் உள்ள அல் அமீன் மசூதியின் தொழுகைக்கு அபினேஷ், தனுஷ் இருவரும் தனுஷின் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

யாமின் உல்லா தொழுகைக்குச் சென்ற பின்பு வெளியில் சென்று வரலாம் என்று தனுஷின் பைக்கை எடுத்துக்கொண்டு புழல்- தாம்பரம் பைபாஸ் ரோட்டில் சென்றனர். அப்போது அபினேஷ் லிங்கேஸ்வரன், தனுஷின் வாகனத்தை தான் ஓட்டுகிறேன் என்று கூறி வாகனத்தை ஓட்டியதாக தெரிகிறது.

வானகரம் ஓடமாநகர் மேம்பாலம் அருகில் செல்லும் தாம்பரம் மார்க்கமாக சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்றதாக தெரிகிறது. எதிர்பாரதவிதமாக லாரி மோதி இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இறந்த அபினேஷ் லிங்கேஸ்வரன் லாரியின் பின்பக்க டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தனுஷிற்கு படுகாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு அபினேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனுஷ்ஷும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆபினேஷ் ஹெல்மெட் அணியவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / P YUVARAJ