சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள உணவகம் மூடல்
சென்னை, 17 மார்ச் (ஹி.ச.) சிலிண்டர் முறையாக கிடைத்ததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரதானமாக செயல்பட்டு வந்த உணவகம் மூடப்பட்டது. நான்கு நாட்களுக்கு மேலாக இங்கு செயல்பட்டு வரக்கூடிய உணவகம் மூடப்பட்டுள்ளது எனவும் இதனால் மருத்துவ
ராஜீவ் காந்தி மருத்துவமனை


சென்னை, 17 மார்ச் (ஹி.ச.)

சிலிண்டர் முறையாக கிடைத்ததால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிரதானமாக செயல்பட்டு வந்த உணவகம் மூடப்பட்டது.

நான்கு நாட்களுக்கு மேலாக இங்கு செயல்பட்டு வரக்கூடிய உணவகம் மூடப்பட்டுள்ளது எனவும் இதனால் மருத்துவ சிகிச்சைக்காக வரக்கூடிய நபர்கள் மற்றும் அவர்களுக்கு உடன் உதவிக்கு வரக் கூடியவர்களுக்கு உணவு வாங்க சற்று சிரமம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனையின் நுழைவாயில் அருகில் இருக்கக்கூடிய மற்றொரு உணவகம் செயல்பட்டு வரும் நிலையில் இந்த உணவகம் மட்டும் சிலிண்டர் இல்லை என்று மூடப்பட்டுள்ளது.

அதேபோல் மருத்துவர்களுக்காக செயல்படும் உணவகம் டீக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

மருத்துவமனை வளாகத்திற்குள் நோயாளிகளுக்கும் அவர்களுடன் உதவிக்கு வருபவர்களுக்கும் உணவு வாங்குவதற்கு தற்பொழுது ஒரு கடை மட்டும் செயல்பட்டு வருவதால் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவுகளை வாங்கிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மருத்துவமனை அருகில் இருக்கக்கூடிய சில கடைகள் கூட இந்த சிலிண்டர் பிரச்சினை காரணமாக மூடப்பட்டிருக்கிறது திறந்திருக்கும் கடைகளிலும் விலை இயல்பை விட அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வெளியூர்களில் இருந்து பலரும் இங்கு சிகிச்சைக்காக வரும் நிலையில் அவர்களுக்கு உதவியாக ஒருவர் மட்டும் இருந்தாலும் அல்லது உதவிக்கு ஆள் இல்லாத நபர்கள் தாங்களே மணி கணக்கில் உணவுக்காக வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டிய சூழல் உள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam