அரூர் அருகே ரூ.14 லட்சம் மதிப்பிலான 13 சவரன் தங்கம் பறிமுதல்!
தருமபுரி, 17 மார்ச் (ஹி.ச.) தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாளையம்புதூர் சுங்க சாவடி அருகே தாசில்தார் சுகுமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணம் இன்றி சொகுசு காரில் எடுத்து வரப்பட்ட 14 லட்சம் மதி
Gold Seizure


தருமபுரி, 17 மார்ச் (ஹி.ச.)

தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாளையம்புதூர் சுங்க சாவடி அருகே தாசில்தார் சுகுமார் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணம் இன்றி சொகுசு காரில் எடுத்து வரப்பட்ட 14 லட்சம் மதிப்புள்ள 104 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதில் தருமபுரி மாவட்டம் அரூர் கோல்டன் சிட்டி பகுதியில் உள்ள கோவிந்தசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் பாலமுருகன் (29). இவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி உரிய ஆவணங்கள் மற்றும் அனுமதி இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 40 கிராம் தங்க நாணயங்கள் இரண்டு, 16 கிராம் தங்க நாணயம் ஒன்று, 8 கிராம் தங்க நாணயம் ஒன்று என ரூ. 14 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 104 கிராம் தங்க நாணயங்களை பறிமுதல் செய்து தருமபுரி கோட்டாட்சியர் காயத்ரியிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் இன்று காலை தருமபுரி மாவட்டம் நலம்பள்ளி அடுத்த விஜய் தனியார் கல்லூரி அருகே, சாமி செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த கவியரசு என்பவர் ஆவணங்கள் இன்றி, சொகுசு காரில் எடுத்துவரப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை தாசில்தார் சுகுமார் தலைமையிலான பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கோட்டாட்சியர் காயத்ரியிடம் ஒப்படைத்தனர்.

உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை செலுத்தி தங்களது தங்க நகையையும் பணத்தையும் வாங்கி செல்லும்படி அறிவுறுத்தினர்.

Hindusthan Samachar / ANANDHAN