Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 17 மார்ச் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் வெளியிட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரங்களை தீவிரப்படுத்தி வருகின்றன.
அதே நேரத்தில் தேர்தல் ஆணையமும் வாக்குப்பதிவு சுதந்திரமாகவும் முறைகேடுகள் இல்லாமல் நடைபெற தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் பணியாற்றி வந்த காவல் கண்காணிப்பாளர்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கரூர், நாகப்பட்டினம், ஈரோடு மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பணியாற்றி வந்த காவல் கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்டது.
அதற்கு புதிய எஸ்.பி.க்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த மாற்றங்கள் தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை உறுதியாக பராமரிக்கவும், வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக டி.வி.கிரண் சுருதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
Hindusthan Samachar / ANANDHAN