திருவனந்தபுர மருத்துவக் கல்லூரியில் திடீர் தீ விபத்து - நோயாளிகள் பத்திரமாக இடமாற்றம்
திருவனந்தபுரம், 17 மார்ச் (ஹி.ச.) திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பல்துறை சிறப்பு பிரிவு கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாள
திருவனந்தபுர மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து - நோயாளிகள் பத்திரமாக இடமாற்றம்


திருவனந்தபுரம், 17 மார்ச் (ஹி.ச.)

திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பல்துறை சிறப்பு பிரிவு கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்தையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, மருத்துவமனை வளாகத்திலேயே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்து குறித்த,முதற்கட்ட விசாரணையில்,

ஒரு மருத்துவ கருவியில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்து குறித்து,மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது,

தற்போது நிலைமை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக

தெரிவித்துள்ளது.

மேலும்,இது தொடர்பான கூடுதல் தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Hindusthan Samachar / JANAKI RAM