பெங்களூர் விமான நிலையத்தில் புகைப்படச் சட்டகத்திற்குள் மறைத்து வைத்து கஞ்சாவை கடத்தல் - ஒருவர் கைது
பெங்களூர், 17 மார்ச் (ஹி.ச.) தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது,பெங்களூரு வந்த ஒரு பயணி, புகைப்படச் (போட்டோ பிரேம்)சட்டத்தில் ம
கைது


பெங்களூர், 17 மார்ச் (ஹி.ச.)

தாய்லாந்தின் பாங்காக்கிலிருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான

நிலையத்திற்கு வந்த பயணிகளை பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது,பெங்களூரு வந்த ஒரு பயணி, புகைப்படச் (போட்டோ பிரேம்)சட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹைட்ரோபோனிக்

கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

சுமார் ரூ. 39.37 லட்சம் மதிப்புள்ள 1.125 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு,

1985 ஆம் ஆண்டு என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam