கரூர் அருகே ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட 4.33 லட்சம் ரூபாய் பறிமுதல்
கரூர், 17 மார்ச் (ஹி.ச.) தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 4.33 லட்சம் ரூபாய்
Money seizure karur


கரூர், 17 மார்ச் (ஹி.ச.)

தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் 4.33 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வாங்கல் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது நாமக்கல் மாவட்டத்திலிருந்து முட்டை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியின் ஓட்டுநர் சுப்பிரமணி என்பவரிடம் ஆவணங்கள் இன்றி இருந்த 3.79 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் கண்டறிந்தனர். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாததால் அந்த பணம் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், உப்பிடமங்கலம் பகுதியில் நடைபெற்ற மற்றொரு வாகன தணிக்கையில், அவ்வழியாக வந்த TN 55 CT 6624 என்ற எண் கொண்ட வாகனத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுகுமார் என்பவர் கோழி விற்பனை செய்த தொகையான 54,000 ரூபாயை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

அதற்கும் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அதிகாரிகள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகையான 4 லட்சத்து 33 ஆயிரம் ரூபாயும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN