Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 17 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாவட்ட எஸ்பிக்களை தேர்தல் ஆணையம் அதிரடியாக பணியிடமாற்றம் செய்து நேற்று (மார்ச் 16 ஆம் தேதி) உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
இதன் தொடர்ச்சியாக தேர்தலை நேர்மையாகவும் முறைகேடுகள் எதுவும் நடக்காமலும் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கரூர், நாகப்பட்டினம், ஈரோடு, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது.
அவர்களுக்குப் பதிலாக, கரூர் மாவட்ட காவல் கணிப்பாளராக ஹரிகிருஷ்ணன் பிரசாத், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கிரண் ஷ்ருதி, நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுஜித் குமார், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஶ்ரீநாதா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி ஹரிகிரண் பிரசாத் இன்று
(மார்ச் 17 ஆம் தேதி) பொறுப்பேற்றுக் கொண்டார்.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்த ஜோஷ் தங்கையா மாற்றம் செய்யப்பட்டு, ஐபிஎஸ் அதிகாரி ஹரிகிரண் பிரசாத் கரூர் மாவட்ட எஸ்.பி-யாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN