மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற நிதின் நபினுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து
சென்னை, 17 மார்ச் (ஹி.ச.) நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தொடர்ந்து நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, தமிழ்நாட்டில்
L. Murugan Congratulates Nitin Nabin


சென்னை, 17 மார்ச் (ஹி.ச.)

நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

தொடர்ந்து நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, தமிழ்நாட்டில் 6 பேர் உட்பட 26 வேட்பாளர்கள் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் பீகார், ஒடிசா மற்றும் அரியானா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 11 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

நேற்று மாலை 5 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன

அதன்படி பிகாரில் 5 மாநிலங்களவை எம்.பி. இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் வெற்றி பெற்றுள்ளார்.

அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நிதின் நபினுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது,

மாநிலங்களவைத் தேர்தலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபினுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்தப் புதிய பொறுப்பில் அவர் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

பாங்கிபூர் சட்டமன்ற உறுப்பினராக நபின் பெற்ற அனுபவமும், அவரது தலைமைத்துவமும் மாநிலங்களவையின் செயல்பாடுகளுக்குத் தீர்க்கமான பங்களிப்பை வழங்கும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b