‘நந்தா தேவி’ எல்பிஜி கப்பல் இன்று குஜராத்தின் காண்ட்லா துறைமுகம் வருகை
புதுடெல்லி, 17 மார்ச் (ஹி.ச.) எல்பிஜி (திரவ பெட்ரோலிய வாயு) ஏற்றிச் செல்லும் ‘நந்தா தேவி’ என்ற சரக்கு கப்பல் இன்று குஜராத் மாநிலத்தின் காண்ட்லா துறைமுகத்தை வந்தடைய உள்ளது. முன்னதாக, சுமார் 46,000 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய வாயுவை ஏற்றிக்கொண்டு இ
‘நந்தா தேவி’ எல்பிஜி கப்பல் இன்று குஜராத்தின் காண்ட்லா துறைமுகம் வருகை


புதுடெல்லி, 17 மார்ச் (ஹி.ச.)

எல்பிஜி (திரவ பெட்ரோலிய வாயு) ஏற்றிச் செல்லும் ‘நந்தா தேவி’ என்ற சரக்கு கப்பல் இன்று குஜராத் மாநிலத்தின் காண்ட்லா துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

முன்னதாக, சுமார் 46,000 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய வாயுவை ஏற்றிக்கொண்டு இந்திய எல்பிஜி கப்பலான ‘சிவாலிக்’ இந்தியாவை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து, அதே அளவிலான எல்பிஜி சரக்குடன் பயணிக்கும் மற்றொரு கப்பலான ‘நந்தா தேவி’ காண்ட்லா துறைமுகத்தை அடைய உள்ளது.

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து வர இந்திய மற்றும் ஈரான் கடற்படைகள் தேவையான உதவிகளை வழங்கியதாக கப்பலின் தலைமை கேப்டன் தெரிவித்தார்.

மேலும், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் மற்றும் இந்திய கப்பல் கழகம் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்ததாகவும் அவர் கூறினார்.

மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர்ச்சூழல் காரணமாக உலகளவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் இந்த 46,000 மெட்ரிக் டன் எல்பிஜி சரக்கு நாட்டின் எரிசக்தி தேவைக்கு முக்கிய ஆதாரமாக இருக்கும் என்றும் தலைமை கேப்டன் குறிப்பிட்டார்.

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து இந்தியாவை நோக்கி வரும் இரண்டாவது எல்பிஜி சரக்கு கப்பல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM