ஏப்ரல் 1 ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருநெல்வேலி, 17 மார்ச் (ஹி.ச.) பங்குனி மாதத்தில் வரும் மிக முக்கியமான சிறப்புக்குரிய நாள் பங்குனி உத்திரம் உற்சவமாகும். இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், திருக்கல்யாண வைபவங்கள் நடைபெறுவது வழக்கம்.அதேபோல்
ஏப்ரல் 1 ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


திருநெல்வேலி, 17 மார்ச் (ஹி.ச.)

பங்குனி மாதத்தில் வரும் மிக முக்கியமான சிறப்புக்குரிய நாள் பங்குனி உத்திரம் உற்சவமாகும். இந்த நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், திருக்கல்யாண வைபவங்கள் நடைபெறுவது வழக்கம்.அதேபோல் சிவபெருமான் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் திருக்கல்யாண வைபவங்கள் நடைபெறும்.

இந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி பங்குனி உத்திரம் வருகின்றது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்துவார்கள்.

இதனால் பக்தர்களின் வசதிக்காகவும், திருவிழா சிறப்பாக நடைபெறவும் மாவட்ட நிர்வாகம் ஏப்ரல் 1 ம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது.

இந்த உள்ளூர் விடுமுறை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சில அரசு தொடர்புடைய நிறுவனங்களுக்கு விடுமுறை இருக்கும். அதே நேரத்தில் அவசர சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் சுகுமார் அறிவித்துள்ளார்.

Hindusthan Samachar / vidya.b