திமுக ஆட்சியால் ஒட்டுமொத்த தமிழகமும் குற்றங்களின் கூடாரமாகவே மாறிவிட்டது - நயினார் நாகேந்திரன் கண்டனம்
சென்னை, 17 மார்ச் (ஹி.ச.) திமுக ஆட்சியில் தேர்தல் காலத்திலும் கொடூர குற்றங்கள் தொடர்ந்து வருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, சேல
Nainar


Hs


சென்னை, 17 மார்ச் (ஹி.ச.)

திமுக ஆட்சியில் தேர்தல் காலத்திலும் கொடூர குற்றங்கள் தொடர்ந்து வருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

சேலம் மாவட்டம் கோரிமேடு பகுதியில், கஞ்சா போதையில் இருந்த இரு இளைஞர்கள் 66 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக வெளிவந்துள்ள செய்தி திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஒட்டுமொத்தமாகச் சீரழிந்ததற்கான சிறந்த சாட்சி.

திமுகவின் 5 ஆண்டுகால கொடூர ஆட்சியால், தமிழகத்தின் நாலாப்புறமும் கஞ்சா புழக்கம் தலைவிரித்தாடி இளைஞர்களின் வாழ்வு பாழாவதோடு வயது வரம்பின்றி அனைத்துதரப்பட்ட தமிழகப் பெண்களின் பாதுகாப்பும் பறிபோய் வருகிறது.

தேர்தல் தேதி அறிவித்த பிறகும் கூட, கொடூர குற்றங்கள் பெருகுவது, திமுக ஆட்சியால் ஒட்டுமொத்த தமிழகமும் குற்றங்களின் கூடாரமாகவே மாறிவிட்டதை உணர்த்துகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறனற்ற நிர்வாகத்தால் அரங்கேறிய இந்த கொடூரத்தைப் பார்த்த பின்பு, இனி என்றுமே திமுகவை ஆட்சியில் அமர்த்தமாட்டார்கள் தமிழக மக்கள், இது நிச்சயம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ