நெல்லை அருகே விவசாயி வெட்டி படுகொலை
நெல்லை, 17 மார்ச் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா ஆழ்வாநேரி கிராமத்தில் இருந்து பருத்திப்பாடு செல்லும் சாலையில் இன்று காலை விவசாயி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு
கொலை


நெல்லை, 17 மார்ச் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா ஆழ்வாநேரி கிராமத்தில் இருந்து பருத்திப்பாடு செல்லும் சாலையில் இன்று காலை விவசாயி ஒருவர் வெட்டி கொலை

செய்யப்பட்டு கிடப்பதாக மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது இறந்தவர் தெற்கு நெல்லையப்பபுரத்தை சேர்ந்த ஆறுமுகம் (52) என அடையாளம் காணப்பட்டது.

மேலும் ஆறுமுகம் மர்ம நபர்களால்கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரிய

வந்தது. மேற்படி சம்பவம் தொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி

வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆறுமுகம் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதை அறிய பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam