பெங்களூருவில் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த அனுமதி
பெங்களூரு, 17 மார்ச் (ஹி.ச.) 19-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 28-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 31-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்நிலையில், சென்ற வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக சென்ற வ
பெங்களூருவில் ஐபிஎல் ஆட்டங்களை நடத்த அனுமதி


பெங்களூரு, 17 மார்ச் (ஹி.ச.)

19-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 28-ஆம் தேதி தொடங்கி மே மாதம் 31-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

இந்நிலையில், சென்ற வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக சென்ற வருடம் ஜூன் மாதம் 4-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.

இந்த காரணத்தால் சின்னச்சாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

தற்போது, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடத்த இருந்த தடையை கர்நாடக அரசாங்கம் நீக்கியுள்ளது.

இதன் மூலம் சின்னசாமி மைதானத்தில் நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM