Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 17 மார்ச் (ஹி.ச.)
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டு பேரின் காவலை மார்ச் 24ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடந்த மார்ச் 12ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்ற ஒரு படகில் இருந்த இரண்டு மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்ததை தொடர்ந்து, இரண்டு மீனவர்களும் மீண்டும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரின் காவலை வருகின்ற மார்ச் 24ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த இரண்டு மீனவர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மீனவர் சமூகத்தில் கவலை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN