Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 17 மார்ச் (ஹி.ச.)
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதன் ஒரு பகுதியாக சாத்தூர் பகுதியில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது மதுரை பகுதியைச் சேர்ந்த நகை வியாபாரி ராம்குமார் கொண்டு வந்திருந்த தங்க நகைகள் குறித்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது சுமார் 70 பவுன் தங்க நகைகள், ரூ.90 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் இருந்தது தெரியவந்தது. ஆனால் அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் பின்னர் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.
தேர்தல் காலத்தில் பணம் மற்றும் மதிப்புள்ள பொருட்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்க இந்த சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / ANANDHAN