Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 மார்ச் (ஹி.ச)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
தனது 50 ஆண்டு கால திரைப் பயணத்தில், தான் சந்தித்த எண்ணற்ற சவால்களை, சாதனைகளாக மாற்றி, தனக்கென தனி முத்திரை பதித்து, மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி என்றும் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர், அன்பு நண்பர், நடிகர் ரஜினிகாந்த்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா மற்றும் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்றவர், அனைவராலும் மதிக்கப்படக்கூடியவர்.
அன்பு நண்பர் ரஜினிகாந்த் எந்த அளவுக்கு சுயமாக முடிவெடுக்கக் கூடியவர் என்பதை இந்த நாடறியும்.
அப்படி இருக்கையில் அரசியலில் ஒன்றுமில்லாதவர்கள், தன்னை ஒரு பெரும் அரசியல் ஆளுமையாகக் காட்டிக்கொள்ள முயல்பவர்கள், ரஜினிகாந்த் குறித்துத் தவறான முன்னுதாரணத்தை உருவாக்க முயல்வது மிகவும் அநாகரிகமானது, கண்டிக்கத்தக்கது என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ