பட்ஜெட் கூட்டத்தொடர் - எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து
புதுடெல்லி, 17 மார்ச் (ஹி.ச.) நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு முன்வைத்த தீர்மானத்தைத் தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா இன்று எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்தார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் - எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து


புதுடெல்லி, 17 மார்ச் (ஹி.ச.)

நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு முன்வைத்த தீர்மானத்தைத் தொடர்ந்து, சபாநாயகர் ஓம் பிர்லா இன்று எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்தார்.

இடைநீக்கம் நீக்கப்பட்டதையடுத்து, குர்ஜீத் சிங் அஜ்லா, ஹிபி ஈடன், டீன் குரியகோஸ், அம்ரிந்தர் சிங் ராஜா வாரிங், பி. மாணிக்கம் தாகூர், டாக்டர் பிரசாந்த் யாதவ்ராவ் படோலே, சாமலா கிரண் குமார் ரெட்டி மற்றும் எஸ். வெங்கடேசன் உள்ளிட்ட எட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.

தீர்மானம் முன்வைக்கப்பட்டபின், சில உறுப்பினர்கள் செய்த எதிர்பாராத விதிமீறல் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா கே. சுரேஷ் வருத்தம் தெரிவித்தார்.

இந்தத் தீர்மானத்தின் மூலம், இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதி பெற்றுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / JANAKI RAM