பல்லடம் அருகே முறையான ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட 2 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை
திருப்பூர், 17 மார்ச் (ஹி.ச) தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதை ஒட்டி, பல்லடம் - உடுமலை சாலையில் சித்தம்பலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடுமலையிலிருந்து பல்லடம் நோக்கி வந்த ஒரு வாகனத்
Tup


திருப்பூர், 17 மார்ச் (ஹி.ச)

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதை ஒட்டி, பல்லடம் - உடுமலை சாலையில் சித்தம்பலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது உடுமலையிலிருந்து பல்லடம் நோக்கி வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.

அந்த சோதனையின் போது, வாகனத்தில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி 2 லட்சம் ரூபாய் ரொக்கம் கொண்டு வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

வாகனத்தில் வந்த மெள்லீஷ் என்பவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் அந்தத் தொகையை பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பணம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணன் அவர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது.

தேர்தல் நெருங்கும் நிலையில், கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / P YUVARAJ