Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 மார்ச் (ஹி.ச.)
சென்னை விமான நிலையத்தில் பேஸ் 2 மற்றும் டெர்மினல் 3 கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதனால், பயணிகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பு கருதி, விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றங்களை இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை விமான நிலையம் டெர்மினல் 4 அருகே தற்காலிக போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
டெர்மினல் 4 அருகே உள்ள வாகனங்கள் உள்ளே வருவதற்கான டோல்கேட் மூடப்பட்டுள்ளது.
தாம்பரம் பகுதியில் இருந்து விமான நிலையத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜிஎஸ்டி சாலை சர்வீஸ் சாலையை பயன்படுத்தி, டெர்மினல் 2 நுழைவு வாயில் டோல்கேட் வழியாக விமான நிலையத்துக்குள் வருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
டெர்மினல் 4 புறப்பாடு பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்கள், ஒரே ஒரு டோல் வழியாக வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு டிராபிக் மார்ஷல்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெர்மினல் 1, டெர்மினல் 2 வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அவர்கள் வழக்கமான வழிகளை பயன்படுத்தலாம்.
பயணிகள் வசதிக்காக, டெர்மினல் 1, டெர்மினல் 4 இடையிலான வாக்கலேட்டர் வசதிகள் வழக்கம்போல் இயக்கப்படுகிறது.
இந்த ஏற்பாடுகள் அனைத்தும் வரும் ஏப்ரல் 24-ம் தேதி வரை 40 நாட்களுக்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b