திருச்சி-காரைக்குடி ரெயில் சேவை தினசரி சேவையாக மாற்றம் - ரெயில்வே அறிவிப்பு
திருச்சி , 17 மார்ச் (ஹி.ச.) திருச்சி-காரைக்குடி பயணிகள் ரெயில் சேவை வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததன் காரணமாக வாரத்தில் 6 நாட்கள் என்று இருந்த இந்த சேவையை தினசரி சேவையாக
Trichy-Karaikudi Train Service


திருச்சி , 17 மார்ச் (ஹி.ச.)

திருச்சி-காரைக்குடி பயணிகள் ரெயில் சேவை வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த வழித்தடத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததன் காரணமாக வாரத்தில் 6 நாட்கள் என்று இருந்த இந்த சேவையை தினசரி சேவையாக மாற்றி ரெயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி வண்டிஎண் 56831 திருச்சி-காரைக்குடி பயணிகள் ரெயில் வருகிற 21-ந் தேதி முதல் தினசரி சேவையாக இயக்கப்படும். வண்டிஎண் 56832 காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் வருகிற

22-ந் தேதி முதல் தினசரி சேவையாக இயக்கப்படும்.

இந்த ரெயில்சேவையின் வழக்கமான இயக்க நேரத்திலும், நிறுத்தங்களிலும் எந்தவித மாற்றமும் இருக்காது என திருச்சி ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b