Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 17 மார்ச் (ஹி.ச.)
தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக முதல்வர் ரீல்ஸ் மோகத்தில் இருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது;
மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்க கூடிய ஒரு சம்பவமாக விளாத்திகுளத்தில் பாலியல் பலாத்காரம் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது மட்டுமல்ல தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை கண்டிப்பதற்காகவும் பெண்ணினத்தை பாதுகாப்பு கொடுப்பதற்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை சொல்வதற்காக நான் வந்துள்ளேன்.
தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக விளம்பர ஆட்சி தான் நடந்து வருகிறது எவ்வளவு பிரச்சனை நடந்து வருகின்ற போது முதலமைச்சர் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்துக்கள் புறக்கணிக்கபட்டு கொண்டிருக்கின்றனர்.
இந்த ஐந்து வருடங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் இந்து பண்டிகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை. நான்காயிரம் குடமுழுக்கு நடத்தி உள்ளதாக சொல்கின்றனர் ஒரு குடமுழுக்கு விழாவிலும் முதலமைச்சர் கலந்து கொல்லவில்லை.
நேற்று இஸ்லாமிய நோன்பில் கலந்து கொண்ட போது தமிழின் அடையாளத்தை நாம் பாதுகாக்க வேண்டும் நாம் எல்லாம் சேர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று சொல்கிறார். தெலுங்கானா மாநிலத்திலும் இப்தர் நோன்பு ஆளுநர் மாளிகையில் நடைபெற்று வருகிறது.
பாஜக மதச்சார்பின்மை உடன் செயல்பட்டு வருகிறோம். பாஜக வந்துவிட்டால் மதச்சார்பு வந்துவிடும் என்று கூறுகின்றனர். இந்து மதத்தை பேசுகின்ற போது சனாதன தர்மத்தை கொசு போன்று ஒழிப்பேன் என்று கூறுகிறார்.
பாகுபாடின்றி எல்லோருக்கும் வாழ்த்து தெரிவிப்பது தான் தமிழின் அடையாளம், தமிழின் அடையாளம் வந்தாரே வரவேற்கும் தான் தமிழகம் அடையாளம் இதையெல்லாம் இப்தார் நோன்புக்கு செல்லக்கூடியவர் தமிழின் அடையாளத்தை நாம் காக்க வேண்டும் என்று சொல்லும் உதயநிதியிடம் ஸ்டாலின் ஆகியோர் தமிழின் அடையாளத்தை குலைத்து வைத்திருக்கின்றனர்.
பிரதமர் வந்தால் கூட வரவேற்பதில்லை. தமிழின் அடையாளம் ஒரு இடத்தில் ஒருவர் துன்பப்பட்டு கொண்டிருக்கும் போது அங்கு ஓடோடி சென்று செல்வதை விட்டுவிட்டு தமிழக முதலமைச்சர் அதைப்பற்றி கவலைப்படாமல் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழின் அடையாளத்தை திமுக தொலைத்து வைத்துக் கொண்டிருக்கிறது. தமிழின் அடையாளத்தை மீட்பது தான் எங்களை நோக்கம் என்று கூறிய அவர்..தமிழக வெற்றி கழகத்தை பாஜக கூட்டணியில் இணைப்பதற்கு நாங்கள் யாருக்கும் அனுப்பவில்லை. அதிமுக பாஜக இயல்பாக கூட்டணி அமைந்துள்ளது.
எங்களை பொறுத்த மட்டில் யாருக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டியது இல்லை. இந்த கூட்டணியில் திமுகவை யாரெல்லாம் தோற்கடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களை கூட்டணியில் நாங்கள் சேர்ந்து இருக்கிறோம்.
அதிமுக பாஜக கூட்டணி பலமாக இருக்கிறது. மோசமான ஆட்சி நடத்துகின்ற திமுக இயற்கை தோல்வி பயம் வந்துவிட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி வந்தான் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்காது சிறுபான்மையினர் வாழ முடியாது என்று சொல்லக்கூடிய திமுக விடம் நான் கேட்கிறேன்.
புதுச்சேரியில் எந்த மதக் கலவரம் மேற்பட்டுள்ளது, என்ன மதச்சார்பு ஏற்பட்டுள்ளது. என்ன கலவரம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தமிழுக்கும் தமிழ்நாட்டை காப்பதற்காக தான் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். திமுக ஆட்சியில் 11 அமைச்சர்கள் மீது லஞ்ச குற்றசாட்டு உள்ளது. பெண்கள் பாதுகாப்பாக செல்ல முடியவில்லை, கஞ்சா புழக்கம் பரவலாக உள்ளது.அனைத்து பதிக்கும் செல்ல முடியவில்லை.
அறிவாலயத்தின் அருகில் நிழலுக்கு ஒதுங்குபவர்களை கூட கூட்டணிக்கு அழைத்து திமுகவினர் சேர்க்கின்றனர்.
தோல்வி பயத்தில் திமுக இருக்கிறது,திமுக தோல்வி முகத்தில் இருக்கிறார்கள், பதற்றத்தில் இருக்கிறார்கள்.
நாங்கள் வெற்றி முகத்தில் இருக்கிறோம், நாங்கள் மக்களுக்காக கூட்டணி அமைத்திருக்கிறோம். தமிழ் மக்களுக்காக கூட்டணி அமைத்திருக்கிறோம்.
Tuticorin விமான நிலையத்தை தூத்துக்குடி என்று மாற்றியது பாரத பிரதமர் தமிழ் மீது கொண்டுள்ள பற்றுக்கு உதாரணம்.
இந்த விமான நிலையம் ஒரு உதாரணம் பாரதப் பிரதமர் நாட்டின் மீது எந்த அளவுக்கு அன்பு செலுத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Hindusthan Samachar / GOKILA arumugam