திமுகவினர் வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்த 90க்கும் மேற்பட்ட சில்வர் அண்டா பறிமுதல்
கோவை, 17 மார்ச் (ஹி.ச.) தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதன் காரணமாக பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்ற
Ukkadam


கோவை, 17 மார்ச் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இதன் காரணமாக பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள ஒரு பழைய குடோனில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் 90க்கும் மேற்பட்ட சில்வர் அண்டாக்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த சில்வர் அண்டாக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் திமுக சார்பில் சில்வர் அண்டாக்கள் பொதுமக்களுக்கும் வாக்காளர்களுக்கும் பரிசு பொருளாக வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் இவ்வாறு பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN