திருவாடானை அருகே பள்ளி வேன் மோதி 4 வயது சிறுமி உயிரிழப்பு
ராமநாதபுரம், 17 மார்ச் (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம், நெய்வயல் அருகே உள்ள நாச்சியந்தல் கிராமத்தில் இன்று காலை மங்களக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குச் சொந்தமான வேன் குழந்தைகளை ஏற்றுவதற்காக வந்துள்ளது. அப்போது, அதே கிராமத்தைச
பலி


ராமநாதபுரம், 17 மார்ச் (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம், நெய்வயல் அருகே உள்ள நாச்சியந்தல் கிராமத்தில் இன்று காலை மங்களக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குச் சொந்தமான வேன் குழந்தைகளை ஏற்றுவதற்காக வந்துள்ளது.

அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த இளையராஜாவின் மகள் கிரேசண்ணா (4) என்ற சிறுமி எதிர்பாராத விதமாக வேனின் முன்பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்.

சிறுமி முன்னால் நிற்பதைக் கவனிக்காமல், என்.மங்கலத்தைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் கணேசன் (66) வண்டியை எடுத்துள்ளார். இதில் வேனின் அடியில் சிக்கிய சிறுமி கிரேசண்ணா, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீஸார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து திருவாடானை காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam