Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை,18 மார்ச் (ஹி.ச.)
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட பகுதியான சுவாமி சிவானந்தா சாலையில் இன்று காலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர பதிவெண் கொண்ட காரை மடக்கி சோதனை செய்தனர்.
சோதனையில் காருக்குள் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 12.58 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தது.
அதனுடன் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்கள், காரம், இனிப்பு வகைகள் வைக்கப்பட்டு இருந்தது.
விசாரணையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் தனது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக கொண்டு செல்வதாக தெரிந்தது.
ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை,சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam