சென்னை அம்பத்தூர் பகுதியில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2-லட்ச ரூபாய் ரொக்க பணம் பறிமுதல்
சென்னை, 18 மார்ச் (ஹி.ச.) தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், முறையான ஆவணம் இன்றி 50 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துச் செல்லப்படும் ரொக்க பணத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பறக்கும் படையினரால் கைப்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு
Ne


சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)

தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், முறையான ஆவணம் இன்றி 50 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துச் செல்லப்படும் ரொக்க பணத்தை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பறக்கும் படையினரால் கைப்பற்றப்படும்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

அதில்,அம்பத்தூர் அம்பத்தூர் ரெட் ஹில்ஸ் பகுதியில் மகேந்திரா தார் என்கிற காரில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்ச ரூபாய் ரொக்க பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அந்த ரொக்க பணத்தை துணை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

Hindusthan Samachar / P YUVARAJ