Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 மார்ச் (ஹி.ச.)
திருச்செந்தூரைச் சேர்ந்தவர் ஆண்ட்ரியா. தாம்பரத்தில் உள்ள MCC கல்லூரியில் படித்து வருகிறார்.
இவரும் கல்லூரி சீனியர் மாணவரான ஜனார்த்தனன் சேலையூர் IAF சாலையில்
பூங்கா தெருவில் இருந்து டியோ பைக்கில் சாலையை கடக்கும் போது புல்லட்டில் அதிவேகமாக வந்த மற்றொரு கல்லூரி மாணவரான சஞ்சய் இடித்ததில் மூன்று நபர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரையும் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மற்றும் சஞ்சயை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
விபத்து தொடர்பாக பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரண மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் படுகாயத்துடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரும்புலியூரைச் சேர்ந்த சிகிச்சை பெற்று வந்த சிஏ மாணவர்
ஜனார்த்தனன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இந்த நிலையில் விபத்து தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜனார்த்தனோடு கல்லூரி மாணவி டியோ பைக்கில் செல்லும் போது புல்லட் வாகனம் நேராக வந்து டியோ பைக்கில் மோதி கல்லூரி மாணவி தூக்கி வீசுவதும் அங்கு இருந்த சக கல்லூரி மாணவர்கள் ஆட்டோவை நிறுத்தி தூக்கி செல்வது போலவும் பதிவாகியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ